இராமநாதபுரம் அருகே அரசு டவுன் பஸ் _ லாரி மோதல் 10 பேர் காயம்..

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் இருந்து அரசு டவுன் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை 6:15 மணிக்கு கிளம்பி பது. 7:00 மணி அளவில், ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர்., சந்திப்பில் சென்ற போது தேவிபட்டினத்தில் இருந்து கீழக்கரை சென்ற லாரி, டவுன் பஸ்சின் முகப்பு பகுதியில் மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த ராமநாதபுரம் அருகே கமுகூரணி அமுதா 50, ஏந்தல் நவநீதம் 60, புதுமடம் ரஸியா பேகம் 43, சல்மா, குர்ஷித் அகமது, அசபுல் குதா, ராமநாதபுரம் வசந்தா, துரத்தியேந்தல் காசியம்மாள், இவரது கணவர் சண்முகம், ஜெய்னுதீன் ஆகியோர் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிசிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து அரசு பஸ் டிரைவர் ராஜசேகர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி லாரி டிரைவர் திருச்சி லால்குடி சரவணன் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!