உசிலம்பட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பெரியார் நிலையத்திலிருந்து வந்த அரசு பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்ற தனியார் பேருந்து அதிவேகமாக சென்றதால் தனது கட்டுப்பாட்டை இழந்து நாட்டாமங்கலம் பேருந்து நிறுத்ததில் மோதியது. இதில் வழக்கமாக பயணிகள் அந்த பேருந்து நிறுத்தில் நின்றுகொண்டிருப்பார்கள் அச்சமயம் பயணிகள் சென்று விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இது போன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேமாக சென்று விபத்து ஏற்படுத்தும் தனியார் பேருந்து நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!