நெல்லை மானூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி..

மானூர் அருகே பைக் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே ரெட்டியார்பட்டியை சார்ந்த மணித்துரை என்பவரது மகன் மயில்ராஜ் (வயது30).

13.05.19 திங்கள் அன்று மானூரிலிருந்து அழகியபாண்டிபுரம் வந்து கொண்டிருக்கும் போது அவரது பைக்கின் குறுக்கே திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஊயிரிழந்த மயில்ராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் விடுமுறையில் தற்போது ஊருக்கு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!