நிலக்கோட்டை அருகே மினி வேன் மோதி ஆடுகள் பலி..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் வயது 37. இவர் உள்ள நிலக்கோட்டை  பகுதியில் ஆடு வளர்ப்பு தொழிலை செய்து வருகிறார்.       இவர் அதிகாலை சுமார் 6 மணி அளவில் தனது ஆடுகளை வத்தலகுண்டு பெரியகுளம் ரோட்டில் நிலக்கோட்டை நோக்கி ஆடுகளை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது பள்ளபட்டியில் இருந்து மதுரை ரோட்டில் வத்தலகுண்டு நோக்கி ஒரு மினி வேன் சென்றது.  அந்த வேன் டிரைவர் செல்போனில் பேசி பேசியபடி நிலக்கோட்டை அடுத்துள்ள மணியகாரன் பட்டி கருப்பு சாமி கோவில்  அருகே வந்து கொண்டிருந்த ஆடுகள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.      இச்சம்பவத்தில்  19 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது,  11 ஆடுகள் காயம் அடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!