மதுரை பைபாஸ் ஏவி பாலம் அருகே இரு சக்கர வாகன விபத்து..

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலையில் ஏவி பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கீழே விழுந்ததில் ஒருவரது கை எலும்பு முறிவு ஏற்பட்டது, மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உடனடியாக சுப்ரமணியபுரம் காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் காயம்பட்டவர்களுக்கு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து புலனாய்வு துறையினருக்கும் தகவல் கொடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பைபாஸ் சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  நெடுஞ்சாலைத்துறை சாலையில் அங்கங்கே பள்ளங்களை சரி செய்து விபத்தை தடுக்க பைபாஸ் சாலையில் புதிதாய் அமைக்கப்படும் சாலையோரத்தில் அமைக்கப்படும் கடைகளை முறைப்படுத்தினால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் குறைய வாய்ப்புகள் உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!