இராமநாதபுரம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தனியார் பள்ளி வேன் மோதி பலி..

இராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த மூர்த்தி மகள் சாருலதா, 20. இவர் ராமநாதபுரம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இன்று மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்து கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சாலை ஓரம் நடந்து சென்றார். அப்போது அது வழி சென்ற பரமக்குடி தனியார் பள்ளி மோதியதில் சாருலதா படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்டித்து அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். செல்போனில் பேசியவாறே பள்ளி பேருந்தை டிரைவர் ஓட்டிச் சென்றதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!