தமிழகத்தில் எங்கே யார் பாதிக்கப்பட்டாலும் உடனுக்குடன் களத்தில் இறங்கி அவர்களுக்கு உதவி செய்து வருபவர் தான் நடிகர் அபி சரவணன் தற்போது அசாம் மாநிலத்தில் அதிகமான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் இறந்தும் போய் உள்ளனர் பல லட்சக்கணக்கான மக்கள் வீடு உடமைகளை இழந்து பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல கிராமங்கள் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அசாம் மாநில மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நடிகர் அபி சரவணன் அவர்கள் பல ஆயிரக்கணக்கான அத்தியாவசிய பொருட்களுடன் அசாம் மாநிலங்களில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார் இவரது உதவிக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் நன்றி சொல்லி பாராட்டியுள்ளனர் அசாம் அரசு அதிகாரிகளே போய் உதவிகள் செய்யாத இடத்திற்கு கூட நடிகர் அபி சரவணன் சென்று உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகரும் சமூக ஆர்வலருமான அபி சரவணன் அவர்களுக்கு “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” புலனாய்வு இதழ் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












