மதுரை மாவட்டம் வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோடு பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவில் பதினோராம் ஆண்டு வருடாபிஷேக விழா மதுரா பில்டிங்ஸ் உரிமையாளரும் கோவில் அறங்காவலருமான வி கே தர்மராஜ் தலைமையில் மதுசூதனன் என்ற கணேஷ்ஐயங்கார் முன்னிலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையோடு துவங்கியது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மதுர விநாயகர் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் தீபாரதனையும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கிழவகராஜன் பாண்டியன் ஒருங்கிணைப்பாளர்கள் குப்புசாமி ராமையா ஆசாரி உட்பட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து விநாயகர் பெருமானை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.