அபாகஸ் கணித போட்டியில் சாதித்து காட்டிய கீழக்கரை பள்ளி மாணவர்கள்..

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அளவில், நேற்று 07.08.18. அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக சங்க கட்டிடடத்தில் நடைபெற்ற அபாகஸ் கணித  போட்டியில் Z3 பிரிவில் கீழக்கரை  கண்ணாடி வாப்பா மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர் ஷாஃபி சராப் 2ம் பரிசும், இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர் பவாஸ் அமீன் என்பவர் Z2 பிரிவில் 3ம் பரிசும், மற்றும் பெர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி ஹாசிரா Z1 பிரிவில் 5வது பரிசும் வென்றுள்ளனர்.

கீழக்கரையில் அனைத்து பள்ளிகளிலிலும் இருந்து 45 மாணவ, மாணவியர் இதில் கலந்து கொண்டனர். பரிசுகளை அள்ளி வரும் மாணவ, மாணவியருக்கு கீழை நியூஸ் நிர்வாகம்  சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு கீழக்கரை மக்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கீழக்கரையில் அபாகஸ் பயிற்சி தரும் இராமநாதபுரத்தை சேர்ந்த உமர் சரீஃபை நீங்கள் பாராட்ட நினைத்தால் 9626096661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!