மதுரை: மதுரை மாவட்டத்தில், தீபாவளி இனிப்புகள் தயாரிக்க இலக்கு வைத்து ஆவின் நிர்வாகம் செயல்பட்டதால், உற்பத்தி பாதித்து பால் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் பாக்கெட் பால் சப்ளை பாதிக்கப்பட்டது. மதுரையில் தினமும் 1.92 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படுகிறது. பால் வரத்து குறைவு, இனிப்புகள் தயாரிக்கும் பாலினை மடை மாற்றம் செய்வது, உள்ளிட்ட காரணங்களால் ஒரு லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில், வழக்கம் போல பால் முகவர்களுக்கு அதிகாலை 3 மணிக்கு பால் பாக்கெட் விநியோகிக்க வேண்டும். ஆனால் வாகனங்கள் காலை 6 மணி வரை பண்ணையை விட்டு வெளியேறவில்லை. காலை 8 மணிக்கு பின், தாமதமாக புறப்பட்டு முகவர்களுக்கு பால் பாக்கெட் விநியோகிக்கப்பட்டது. இதனால், தத்தனேரி, பிபி குளம், மகாத்மா காந்தி நகர், கிருஷ்ணாபுரம் காலனி, கோசா குளம், அண்ணா நகர், கேகே நகர் ,கூடல் நகர் ,சிக்கந்தர்சாவடி, உள்பட பல்வேறு பகுதிகளில் பால் விநியோகம் தாமதமானது. குறித்த நேரத்தில், வாடிக்கையாளருக்கு ஆவின் பாலை விநியோகிக்க முடியாமல், முகவர்கள் சிரமப்பட்டனர். மேலும், பால் கிடைக்காமல் தனியார் பாலை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர். குறிப்பிட நேரத்திற்குள் ஆவின் பாலை சப்ளை செய்ய முடியாததால், விற்பனையாகாமல் தேங்கிய பால் பாக்கெட் களைப் பதப்படுத்தி பாதுகாக்க விற்க முடியாது என்பதால், முகவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. முகவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வலியுறுத் தப்பட்டுள்ளது. இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், உற்பத்தியாளர்கள் பெரும்பாலான பாலை, தனியாரிடம் கூடுதல் விலைக்கு விற்க ஆர்வம் காட்டினர். இதனால், ஆவின் பால் கொள்முதல் குறைந்து உற்பத்தி பாதித்தது என்றனர்.
ஆவின் பால் வரத்து தாமதமானதால், தீபாவளியன்று தனியார் பால் அமோகமாக விற்பனையானதாம்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









