உலக வெப்பமாவதை தடுக்க இயற்கையை பாதுகாக்க (ஜி சி எஸ்) கிரீன் கிறிஸ்டல் சோஷியல் கமிட்டி பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
ஜி சி எஸ் நிறுவனத் தலைவர் ஜி. சந்திரசேகரன் அவர்களின் வழிகாட்டுதலில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் சாஸ்தா புரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயம் மற்றும் ஆர் பட்டி . திருமலை குப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஜி சி எஸ் பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது . இந்தியாவில் உள்ள ஜி சி எஸ் பசுமை இயக்கத்தின் சார்பில் தமிழ் நாடு புதுச்சேரி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா ஆகிய 9 மாநிலங்களில் கடந்த இரண்டு வருட காலமாக 3 கோடிக்கு மேல் மரக்கன்றுகளை நடவு செய்து ஜி சி எஸ் பசுமை இயக்கம் சாதனை படைத்துள்ளது.
இதனை கொண்டாடும் நிறைவு விழாவாக மண்டல பொறுப்பாளர் எஸ். தியாகராஜன் தேசிய இளைஞர் அணி செயலாளர் கே. எல் பிரதாப் அவர்களின் தலைமையிலும் வேலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சீனிவாசன் .பெருமாள் . சுப்பிரமணி .பட விட்டான்.வெங்கடேசன் .ராஜன்.தாமோதரன் மோகன்தாஸ் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் ஜே. லோகநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் இளைஞர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டும் ஆலயங்களை தூய்மைப் படுத்திக் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கி அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர் வழங்கினர்.மேலும் அனைவருக்கும் கிரீன் கிறிஷ்டல் சோஷியல் கமிட்டி பற்றி தெரியபடுத்தி ஊரு பொது மக்களுக்கு மரக்கன்றுகளை நடுதல் அதனுடைய அவசியத்தை பற்றியும் விழிப்புணர்வு செய்தனர் இறுதியில் கிரீன் கிரிஸ்டல் சோஷியல் கமிட்டி உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.


You must be logged in to post a comment.