இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே ஆலங்குலம் இரட்டைப்பிள்ளையார் , கருப்பணசாமி, ராக்கச்சிஅம்மன் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் ஞாயிறு காலை 10.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு காப்புக்கட்டு தலுடன் தொடங்கியது. அன்று இரவு 9 மணியளவில் முதல் கால யாக பூஜை நடந்தது. திங்கள் கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை நடைபெற்று. மேலும் காலை 10 மணிக்கு கடம் புறப்பாடாகி தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 11 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், ஆலங்குளம் முன்னால் ஊராட்சி தலைவர் குமரவேல், தொழிலதிபர்கள் முனியசாமி, முரளிதரன், காண்ட்ராக்டர்கள் பால்ராஜ், ஆலங்குளம் மலைராஜ், வருமான வரி அலுவலர் வசந்தி பாண்டித்துரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் (ஓய்வு) பாண்டித்துரை உள்ளிட்ட. ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். விழா ஏற்பாடுகளை சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











