ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை சோழவந்தான் அருகே சிறப்பு பூஜை வழிபாடுகள்..

ஆடி அமாவாசை, தை அமாவாசை  ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும்.

குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.. அந்தவகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில்  தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர், இங்குள்ள போத்திகள் மற்றும் விற்பனர்கள் மந்திரம் ஓத  எள், பச்சரிசி, தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை  நினைத்து வழிபாடு செய்தனர்.  இது போன்று இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  பின்னர்  இங்குள்ள அருள்மிகு ஏடகநாதர் ஏழவார்குழலிசிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!