விஜய் உடன் கைகோர்க்கும் ஆதவ் அர்ஜுனா.. தவெகவில் முக்கிய பொறுப்பு..?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் உடன் விசிகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சந்திப்பு நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின், ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பலமான கட்டமைப்பை உருவாகக் விஜய் முயற்சித்து வருகிறார்.
அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் அக்கட்சியின் முதலாமாண்டு நிறைவு விழாவில் வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தின் வலுவான கட்டமைப்பை உருவாக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
You must be logged in to post a comment.