இராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 11 வட்டாரங்களிலும் 22,605 முன்பருவ கல்வி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் வேகவைத்த முட்டை மற்றும் கலவை சாதம் வழங்கப்படுகிறது. முன்பருவ கல்வி அளிக்கப்படுகிறது. 6 மாதம் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகளின் வளர்ச்சியை தெரிந்து கொள்ள மாதந்தோறும் அங்கன்வாடியில் எடை குறுக்காய்வு செய்யப்பட்டு, எடைக்குறைவான குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கூடுதலாக இணை உணவு (சத்துருண்டை) வழங்கப்படுகிறது.

ஆதார் புகைப்படம் பெரியவர்கள் மற்றும் பிறந்தது முதல் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் எடுக்கப்பட வேண்டும். குழந்தைகளை ஆரம்ப பள்ளியில் சேர்க்கவும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்து பயன் பெறவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் ஊரில் உள்ள அங்கன்வாடி மையங்களை அணுகி இலவசமாக ஆதார் புகைப்படம் எடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









