இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சிநேயர் என்பவர் சமூகவலைதளத்தில் (Instagram) சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக வாள் உடன் தனது புகைப்படத்தை ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 31.12.2024-ம் தேதி பார்த்திபனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு வைக்கப்பட்டுள்ளார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று சட்டம்-ஒழுங்கு மற்றும் இரண்டு மதங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை பதிவிடும் இளைஞர்களுடைய சமூக வலைதள பக்கங்களை இராமநாதபுரம் மாவட்ட சமூக வலைதள குற்ற தடுப்பு பிரிவின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது என்றும், இதுபோன்று சமூகவலைதளங்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கடுமையாக எச்சரித்துள்ளார்.


You must be logged in to post a comment.