ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்கு வாகனத்தில் கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் OCIU பிரிவினர் திருப்புல்லாணியை அடுத்த ஆனைகுடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த TATA AC வாகனத்தை சோதனை செய்தனர் சோதனையில் 11,88,000 லட்சம் மதிப்பிலான PREGAP Capusules எனும் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதை கண்டதும் அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுனரான திருப்புல்லாணி நம்பியான் வலசை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(20) என்பவரை பிடித்து திருப்புல்லாணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.