மாற்றுத்திறனாளி குடும்பத்தோடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:
கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை வைத்திருக்கும் அவருக்கு கூடுதல் வாடகை நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டு..!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இன்று அவர் திடீரென தன்னுடைய குடும்பத்தோடு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து கூறிய அவர், கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை வைத்து நடத்தி வருவதாகவும், தனக்கு மாத வாடகை 7000 ரூபாய் நிர்ணயித்து இருப்பதாகவும் கட்டுபடியாகாது வாடகை என்று எவ்வளவோ கூறியும் கேட்கவில்லை என்றும், இதனால் தான் அங்கு தொழில் செய்ய முடியாத சூழல் நிலவு வருவதாகவும் இதுகுறித்து கமுதி பேரூராட்சி நிர்வாகத்திடம் எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் செவி சாய்க்கவில்லை என்று புகார் தெரிவிக்கிறார்.
மேலும், இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு அநியாயம் இழைக்கப்படுவதாக கூறி குடும்பத்தோடு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.