இராமேஸ்வரம் தீவின் பாம்பன் பகுதியில் அமைந்துள்ள நேசக்கரங்கள் அறக்கட்டளையின் மூலமாக இயங்கும் கடல் ஓசை Fm 90.4ன் நிலையத்தின் சார்பாக உலக வானொலி தினம் கொண்டாடபட்டது. இதில் நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன.
ஆசியாவிலேயே மீனவர்களுக்கான முதல் சமூதாய வானொலியை திரு.ஆம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோவால் தொடங்கப்பட்டது. மீனவ சமூகத்திற்க்கு கடல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்துதல்,மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், வானிலை தகவல்களை கூறுதல், மாணவர்களுக்கு கல்வி சார்ந்த நிகழ்வுகள் போட்டிகள், பெண்கள், சிறுவர்கள் நலன் காக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் என்ற சிறப்பான சமூக சேவையை செய்து வருகிறது பாம்பன் கடல் ஓசைFm என நிலைய இயக்குநர் திருமதி.காயத்திரி உஸ்மான் கூறுகிறார்.
இதில் சிறப்பு விருந்தினராக CMFRI மத்திய மீன்வள கடல் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி திரு.ஜான்ஸன் அவர்கள் வானொலி கண்காட்சியை திறந்து வைத்தார். கடலோர காவல் குழுமத்தின் சப் இன்ஸ்பெக்டர் திரு.கனேசமூர்த்தி முன்னிலை வகித்தார் மேலும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஏராளமானோர் வானொலி நிலையத்தையும் வானொலி கண்காட்சியையும் பார்வையிட்டனர், வருகையாளர்களுக்கு ரேடியோவின் வரலாறு மற்றும் ரேடியோ இயங்கும் விதம் நிகழ்ச்சி எவ்வாறு தொகுக்கப்படுகிறது, RJக்களின் பணி போன்றவை விவரிக்கப்பட்டது.
மேலும் வானொலி பற்றிய கவிதை போட்டியில் வெற்றி பெற்ற நேயர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














