சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்களை வெறி நாய் ஒன்று தொடர்ச்சியாக காலில் கடித்து விட்டு தப்பி ஓடியது . இதில் தேவகோட்டை நகராட்சி அதிமுக கவுன்சிலர் முத்தழகு (55) வினோத்குமார் (19) அர்ஜுனன் (55)அன்பரசன் (52) வீரசேகரன் (43) நிகேதன் (23) பகுருதீன் (60) விஜயா (38) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் சென்ற நபர்களை தொடர்ச்சியாக கடித்த வெறிநாயை பிடிப்பதற்கு தேவகோட்டை நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

You must be logged in to post a comment.