மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் 750 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

இந்திய அரசு கொரோனா கிருமி நோய்த்தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்து 27-வது நாளான மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் 750 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி அடியாமங்கலம், முளப்பக்கம், ரயிலடி பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை, மயிலாடுதுறை வட்டாட்சியர் முருகானந்தம் மற்றும் மகளிர் உதவி காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஊராட்சி மன்றத்தலைவர் தமிழரசன் வழங்கினார்

மேலும் ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்க்கொடி சிவலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், செல்வி செல்வம், மீனாட்சி ராஜேந்திரன், ராஜ்மோகன், தங்கம் தியாகராஜன், பிரசன்னா சந்திரன்,ராமலிங்கம், அபிராமி மற்றும் கிராம இளைஞர்கள் சம்பந்தம், பாஸ்கர், அன்பரசன், பவானி ரஜினி, ராமன், ரஜினி, ராஜா, ரத்தினகுமார்,பிரேம்குமார் , ராஜவேலு, பாண்டியன், கமலக்கண்ணன், ஐயப்பன், கலைவாணன், கலைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

இரா.யோகுதாஸ்,மயிலாடுதுறை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!