‘
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 70 வயசுல என் புருஷன் என்னை டைவர்ஸ் பண்ணிட்டாருன்னு பொய்யா ஏமாத்தி மோசடி செஞ்ச பாவிங்க.. 250 சவரன் நகையவும் பணத்தையும் ஏமாத்திட்டாங்க..- எஸ்.பி. அலுவலகத்தில் புலம்பித் தள்ளிய கமுதி மூதாட்டியின் சோகக் கதை…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் போஸ் தேவர். இவருக்கு பஞ்சவர்ணம் மற்றும் பாக்கியம் என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். போஸ் கடந்த 2022 டிசம்பர் 1ஆம் தேதி உயிரிழந்த நிலையில், மூத்த மனைவியான பஞ்சவர்ணத்துக்கு அவருடைய கணவர் போஸ் வாங்கி கொடுத்த 250 பவுன் தங்க நகைகளையும், பீரோவில் வைத்திருந்த பணத்தையும் இளைய மனைவி பாக்கியத்தின் மகன் போஸ் செல்வா ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியாக நகைகளை அபகரித்து விட்டதாகவும், இதேபோன்று கமுதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் வீடுகளின் பத்திரங்களை போலி சான்றிதழ்கள் தயாரித்து தனது பெயரில் மாற்றிக்கொண்டு தற்போது பஞ்சவர்ணத்தை தெருவில் ஆதரவின்றி விட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பஞ்சவர்ணம் மற்றும் அவருடைய மகனுடன் இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுவில், கமுதி பேரூராட்சி கவுன்சிலராக இருந்து வரும் செல்வேந்திரன் என்ற “போஸ் செல்வா” திமுக கவுன்சிலான இவர் தனது கட்சிப் பதவியை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்டோர் தமக்கு ஆதரவாக இருப்பதாக கூறி பஞ்சவர்ணம் பெயரில் வங்கியில் இருந்த 3 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வீட்டில் இருந்த 250 சவரன் தங்க நகைகளையும், அதே போல் பணத்தையும் அபகரித்து சென்றதாக புகார் தெரிவித்துள்ளனர்.
கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் ஆளுங்கட்சியை அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இவர்களுடைய புகாரை வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.