முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 45 வது ஆண்டு விழா மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது தலைமையில் நடைபெற்றது. முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூக்கத்தில் கல்லூரியின் வளர்ச்சி குறித்து உடற்கல்வி இயக்குநர் தமருதாசலமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தனர். கல்லூரியின் துணை முதல்வரும், இயந்திரவியல் துறை தலைவருமான முனைவர் கணேஷ்குமார் வரவேற்றார். இவ்விழாவிற்கு சென்னை லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட் ன் பொது மேலாளர் மற்றும் மனிதவள துறைத்தலைவர் உதயகுமார் சென்னை லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட் ன் சிஎஸ்ஆர் ஆலோசகர் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் கடந்த ஆண்டு வாரியத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் விளையாட்டு தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு நற்சான்றுடன் பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது
தொழில்நுட்ப மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை மூலம் வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் தொழில்நுட்ப அறிவின் முக்கியத்துவத்தையும் வேலைவாய்ப்புக்குத் தேவையான மென் திறன்களின் அவசியத்தையும் பற்றி பேசினார்கள்
முத்தாய்ப்பாக சென்னை லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட் இறுதியாண்டு மாணவர்கள் மூவர்க்கு சிறந்த மாணவர்களுக்கான ரூ 10,000 பண விருதுகளும், இரண்டாம் ஆண்டு மாணவர்களில் தகுதியான மூன்று நபர்களுக்கு ஒரு வருடத்திற்கான கல்விக் கட்டணமும் மற்றும் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணமும் வழங்கப்படுகிறது என்றும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு அவர்தம் பெற்றோர் முன்னிலையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் திரகணேஷ்குமார் செய்திருந்தார்கள்
மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக மின்னியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்கள்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் சிறப்பாக செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.