திரு உத்தரகோசமங்கை ஆலய கும்பாபிஷேகத்தன்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் சுமார் 45 பவுன் நகை திருட்டு; கொள்ளையர்கள் கைவரிசை செய்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா கடந்த நான்காம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
இதில் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்திய கொள்ளையர்கள் மற்றும் மர்ம நபர்கள் பக்தர்களின் கழுத்து காதுகளில் அணிந்து இருந்த நகைகள் சுமார் 45 பவுன் நகை திருடப்பட்டதாக தற்பொழுது திரு உத்தரகோசமங்கை காவல் நிலையத்திற்கு புகார் ஆனது வந்து கொண்டே இருக்கிறது
கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திருடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
You must be logged in to post a comment.