www.keelainews.com என்ற இணைய தளம் கடந்த 2016ம் ஆண்டு கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை மக்களுக்கு நடுநிலையுடன் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சாலிஹ் ஹுசைன், அப்துர் ரஹ்மான், மிசம்மில் இபுராஹிம் மற்றும் செய்யது ஆப்தீன் ஆகியோரின் முயற்சியுடன் தொடங்கப்பட்டது.
பின்னர் 2017ம் ஆண்டில் வீடியோ செய்தி மற்றும் யூட்யுப் சேனல் மூலமாக முக்கிய நிகழ்வுகளையும், சமுதாய பிரச்சினைகளையும் நேரடி ரிப்போர்ட் ஆகவும், வீடியோ செய்தியாகவும் வெளியிட தொடங்கியது. தொடக்கத்தில் தினமும் 200 முதல் 500 பார்வைகளுடன் தொடங்கிய இணையதளம், தற்சமயம் குறைந்த பட்சம் தினமும் 4000 முதல் 10,000கும் மேலான பார்வையாளர்களை எட்டியிருப்பது, நடுநிலையான செய்திக்கு வாசகர்கள் தந்த ஆதரவு என்பதே உண்மையாகும்.
செய்தி உலகில் அடுத்த கட்டத்தை அடையும் நோக்கில் 2018 முதல் தமிழகம் முழுவதும் நிருபர்கள் (தொடர்பு பகுதியில் அனைத்து நிருபர்கள் விபரங்களை காணலாம்) நியமிக்கப்பட்டு கீழக்கரை என்ற எல்லையை தாண்டி தமிழகம் மற்றும் அனைத்து பகுதி செய்திகளையும் மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளது. மேலும் இந்த குறுகிய காலத்தில் முகநூல் பக்கத்தில் 20,000கும் மேலான நண்பர் வட்டத்தையும் அடைந்துள்ளமைக்கு முக்கிய காரணம் வாசகர்களின் ஒத்துழைப்பும், ஆதரவுமே தவிர வேறொன்றுமில்லை.
அதே சமயம் கீழைநியூஸ் செய்திகளை வழங்குவது மட்டுமல்லாமல், சமுதாய பொறுப்புடன் கேரளா மற்றும் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி, மண்டபம் மற்றும் கும்படுமதுரையில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு புனரமைப்பு பணிகளுக்கு பொருளாதார உதவி, ஆம்புலன்ஸ் வாங்க நிதி உதவி, கீழக்கரை வளர்ச்சி பணிகளுக்கான நிதி உதவி போன்ற பல் வேறு சமுதாய பணிகளுக்கும் பங்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தருணத்தில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து நல்லுல்லங்களுக்கும் கீழை நியூஸ் நிர்வாகம் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.
இத்தளத்தில் வெளி வந்த இணைய தள ஆரம்ப விழா செய்தியை கீழே காணலாம்.
https://keelainews.in/2016/12/29/keelainews-inaguration/Facebook Account & Page
https://www.facebook.com/profile.php?id=100013434036333
https://www.facebook.com/keelainews/
YouTube Channel
https://www.youtube.com/channel/UCUzvODZAA2y2Zu0zT6sVyY
@KLKMKK

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









