அரோபனா இந்தியன் பள்ளியின் 3வது ஆண்டு விழா.!

மதுரை, அரோபனா இந்தியன் பள்ளியின் 3வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஸ்ரீ அரபிந்தோ மீரா கல்விக்குழுத் தலைவர் முனைவர் C.சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குநர் MC. அபிலாஷ், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்றுப் பேசினார். இணை இயக்குநர் நிக்கிபுளோரா கலந்து கொண்டு பரிசு வழங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் இந்தப் பள்ளி எதிர்காலத்தை நோக்கி மிகுந்த பார்வையுடன் நகர்கிறது. இதன் நிர்வாகம் கல்விக்கான மிகுந்த உழைப்பையும் ஆர்வத்தையும் கொண்டுள்ளது. எனவே உண்மையிலேயே ஒரு சிறந்த இடத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். நான் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் இவர்களின் யுனிவர்சல் பள்ளியின் வளாகம் உள்கட்டமைப்பு, கல்வித் தரம் மிக அற்புதமாகவும், ஆச்சரியம் அளிக்கக் கூடிய வகையிலும் இருக்கிறது. குழந்தைகளிடம் இயல்பாகவே திறமைகள் இருக்கும். அவர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை சரியான முறையில் ஊக்குவித்தால் அந்தத் துறையில் அவர்கள் சாதனை படைப்பார்கள், தற்போதுள்ள போட்டி நிறைந்த உலகத்தில் குழந்தைகளுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன, அவற்றை எதிர்கொள்ள அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வெற்றிபெற முடியும் என்று மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினார். விழா இனிதே நிறைவு பெற்றது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!