மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 57 ஊராட்சிகளுக்கு பூம்புகார் சட்டமன்ற தொகுதி ஆஇஅதிமுக உறுப்பினர் எஸ் பவுன்ராஜ் தனது சொந்த நிதியிலிருந்து 380 தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள் மற்றும் நிவாரண நிதியாக ரூபாய் 1,000/-
வழங்கினார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பூர், திருவிளையாட்டம், கூடலூர், பரசலூர், செம்பனார்கோயில், நடுக்கரை, தலை உடையவர் கோயில், மடப்புரம், திருக்கடையூர் ஆகிய ஊராட்சியை மையமாகக்கொண்டு, சுற்றியுள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் 380 தூய்மை பணியாளர்களுக்கு செம்பனார்கோயில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தியாகராஜன் அருண் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் முன்னிலையில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி ஆஇஅதிமுக உறுப்பினர் எஸ் பவுன்ராஜ் கொரோனா நிவாரண நிதி ரூ.1,000/- மற்றும் அரிசி, காய்கறிகள் வழங்கி துவக்கி வைத்தார். இதன் மதிப்பு ரூபாய் 5 லட்சம் குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியை, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.இதில் ஊராட்சி பிரதிநிதிகளும், ஆஇஅதிமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.