அம்மா சொன்னால் மட்டுமே ஒரு குழந்தைக்கு அப்பா யாரென்று தெரியும். ஒரே குழந்தைக்கு மூன்று பேர் சொந்தம் கொண்டாடினால் யார் அப்பா என்று அந்த பெண் சொன்னால்தான் தெரியும். இப்படி ஒரு விசித்திரமான சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது. சப்னா மைத்ரா என்ற அந்த பெண்ணை நிறைமாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் கணவர் தீபன்கர்பால் அனுமதித்தார்.
அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிள்ளை பிறந்தது சுகப்பிரசவம்தான், அதற்குப்பிறகுதான் பிரச்சினையே கிளம்பியது. பிறந்த பிள்ளையை போட்டோ எடுத்து டிபி வைத்ததோடு பெண் குழந்தை பிறந்திருக்கு என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். அதற்கு அடுத்த சில நிமிடங்களில் ஹர்ஷா கேத்ரி என்ற ஒருவர் மருத்துவமனைக்கு ஓடி வந்தார். மருத்துவமனையில் இருந்த செவிலியர்களிடம் தான் சப்னாவின் கணவர் என்றும் பிறந்த குழந்தைக்கு அப்பா என்றும் கூறினார்.ஆனால் செவிலியர்களுக்கு லேசான சந்தேகம் இருந்தது எனவே குழந்தை பிறந்த அறைக்குள் அந்த நபரை விடவில்லை. செக்யூரிட்டியை கூப்பிட்டு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று கூறி விட்டு சென்றார் செவிலியர். அடுத்த சில மணிநேரங்களுக்குள் மற்றொருவர் ஓடி வந்தார். எங்கே என் மனைவி குழந்தை என்று கேட்டுக்கொண்டு வந்தார் தனது பெயர் பிரதீப் ராய் என்று கூறிய அந்த நபர் தான் தான் சப்னாவின் கணவர் என்றும் குழந்தைக்கு அப்பா என்றும் கூறினார்.
ஏற்கனவே சப்னாவின் கணவர் தீபன்கர்பால் இருக்கும் போது ஹர்ஷா கேத்ரி, பிரதீப் ராய் ஆகியோரும் அப்பா என்று சொந்தம் கொண்டாடி வந்தது ஏன் என்று குழம்பிப்போன மருத்துவமனை நிர்வாகத்தினர் நடாஜிநகர் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாறி மாறி விசாரித்தும் ஆண்கள் மூவரும் தாங்கள்தான் குழந்தைக்கு அப்பா என்று கூறினர். இந்த சம்பவத்தை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்த அந்த குழந்தையின் அம்மாவோ எதைப்பற்றியும் மூச்சு விடாமல் அமைதியாக இருந்து விட்டார், அவர் வாயை திறந்து சொன்னால் மட்டுமே பெண் குழந்தைக்கு அப்பா யாரென்று தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









