சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 253வது குருபூஜை விழா
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் சுதந்திர பிரகடனம் செய்து உயிர் நீத்த வீரரும் சிவகங்கை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னரும் சுதந்திர போராட்ட வீராங்கனை வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் கணவருமான சசிவர்ண முத்து வடுகநாதரின் 253 வது நினைவு நாளை முன்னிட்டு
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.
விழாவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் திரளாகக் கூடி, சன்னதி சுற்றிலும் வழிபாடு செய்து, தீப ஆராதனையில் கலந்துகொண்டனர்.
சமூக அமைப்புகள், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் ஆன்மிக விழிப்புணர்வாளர்களும் இதில் பங்கேற்றனர்
You must be logged in to post a comment.