2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தேதிகளை தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தேதிகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் உள்துறைத் துறை சார்பில், முதன்மைச் செயலர் என். முருகானந்தம் கையெழுத்திட்ட உத்தரவில் எந்தெந்தெந்த நாட்களில் விடுமுறை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ளதன்படி, ஞாயிற்று கிழமைகள் அல்லாமல் கீழ்காணும் தினங்களும் அரசு விடுமுறையாக கருதப்படும். இந்த நாட்களில் அரசுத் துறைகள், அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது.

இதுதவிர வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு துறைரீதியான விடுமுறைகள் தனிப்பட்ட முறையில் அளிக்கப்படலாம்.

புத்தாண்டு தினம் – ஜனவரி 1 (வியாழன்)

பொங்கல் – ஜனவரி 15 (வியாழன்)

திருவள்ளுவர் தினம் – ஜனவரி 16 (வெள்ளி)

உழவர் திருநாள் – ஜனவரி 17 (சனி)

குடியரசு தினம் – ஜனவரி 26 (திங்கள்)

தைப்பூசம் – பிப்ரவரி 1 (ஞாயிறு)

தெலுங்கு புத்தாண்டு தினம் – மார்ச் 19 (வியாழன்)

ரம்ஜான் (ஈதுல் பித்ர்) – மார்ச் 21 (சனி)

மகாவீர் ஜெயந்தி – மார்ச் 31 (செவ்வாய்)

வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள் – ஏப்ரல் 1 (புதன்) (வங்கிகளுக்கு மட்டும்)

புனித வெள்ளி – ஏப்ரல் 3 (வெள்ளி)

தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் – ஏப்ரல் 14 (செவ்வாய்)

மே தினம் – மே 1 (வெள்ளி)

பக்ரீத்– மே 28 (வியாழன்)

முகரம் (யோம்-இ-ஷஹாதத்) – ஜூன் 26 (வெள்ளி)

சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15 (சனி)

மிலாதுன் நபி (நபி பிறந்த நாள்) – ஆகஸ்ட் 26 (புதன்)

கிருஷ்ண ஜெயந்தி – செப்டம்பர் 4 (வெள்ளி)

விநாயகர் சதுர்த்தி – செப்டம்பர் 14 (திங்கள்)

காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2 (வெள்ளி)

ஆயுத பூஜை – அக்டோபர் 19 (திங்கள்)

விஜயதசமி – அக்டோபர் 20 (செவ்வாய்)

தீபாவளி – நவம்பர் 8 (ஞாயிறு)

கிறிஸ்துமஸ் – டிசம்பர் 25 (வெள்ளி)

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!