நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 08.05 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தூத்துக்குடி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகித்து வருகிறார்.மத்திய சென்னை, மதுரை, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.திண்டுக்கல் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்து வருகிறார்.

You must be logged in to post a comment.