5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்..
மக்களவை 5-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் தேர்தல்.. பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக வாக்குப்பதிவு. உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி, லக்னோ மற்றும் கைசர்கஞ்ச்; பீகாரில் சரண், ஆறு மும்பை மக்களவைத் தொகுதிகள், மகாராஷ்டிராவில் கல்யாணில் தேர்தல்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சிராக் பாஸ்வான் உள்ளிட்ட 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


You must be logged in to post a comment.