பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.மாலை 5 மணி நேர நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.ஆந்திரா- 68.04 சதவீதம், பீகார்- 54.14 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 35.75 சதவீதம், ஜார்கண்ட் 63.14 சதவீதம், மத்திய பிரதேசம் 68.01 சதவீதம், மகாராஷ்டிரா 52.49 சதவீதம், ஒடிசா 62.96 சதவீதம், தெலங்கானா61.16 சதவீதம், உத்தர பிரதசேம் 56.35 சதவீதம், மேற்குவங்கம் 75.66 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.தொடர்ந்து, ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மணி நேர நிலவரப்படி 67.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

You must be logged in to post a comment.