மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்!- காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே..

இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எங்கள் கூட்டணிக்கு கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்கள், இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.பாஜக மற்றும் அவர்களின் வெறுப்பு, ஊழல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குமான ஆணையாகும்.மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்.இது எங்களுடைய முடிவு. இந்த விஷயங்களில் நாங்கள் முழுமையாக உடன்பட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பா.ஜ.க. ஆட்சி அமையக் கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்.இது மோடிக்கு அப்பட்டமான தோல்வி. தோல்விகளை மறைக்க மோடி பல்வேறு யுக்திகளைக் கையாள்வார். மோடிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளார்கள். ஆனால் இதை மோடி மாற்ற துடிக்கிறார் என தெரிவித்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!