தனித்து போட்டியிட்டு சாதனை படைத்த நாம் தமிழர் கட்சி.
மூன்றாம் இடம் பிடித்த தொகுதிகள்:
கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை திருச்சி மற்றும் புதுவை.
1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற இடங்கள்:
சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், நாகை, தென்காசி மயிலாடுதுறை, திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருச்சி, கிருஷ்ணகிரி.
அதிகபட்சமாக சிவகங்கையில் எழிலரசி 1,63,412 வாக்குகளைப் பெற்றார்.
தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி..
தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது.
கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றிருந்தது.
12 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் அதனை பெற்றது நாம் தமிழர்.
பாமகவை விட தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி இரண்டு மடங்கு அதிக வாக்கு சதவீதத்தை தேர்தலில் பெற்றுள்ளது
நாம் தமிழர் கட்சி 8.22% பெற்றுள்ளது.
அவர்கள் வழக்கமாக வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் புதிதாக கொடுக்கப்பட்டு அதுவும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டு அதை வைத்து குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
You must be logged in to post a comment.