ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராகும் நடிகர் பவன் கல்யாண்?..

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் 21 தொகுதிகளில் ஜனசேனா கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 235 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. படிப்படியாக வெற்றி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. இதில் அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு மட்டும் கடந்த 2 ஆம் தேதி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் எஸ்கேஎம்மும் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டன.

இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து களம் கண்டது.

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், சந்திரபாபு நாயுடு கட்சி 135 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அவரது கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் கட்சி 21 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், பாஜக 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்க 18 இடங்களை பெற வேண்டிய நிலையில், பவன் கல்யாண் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!