ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 134 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய சந்திரநாயுடுக்கு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதே போல் நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்போது ஆந்திராவில் அதிக இடங்களை வென்ற பவன் கல்யாணுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் கட்சி தற்போது ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.