அயோத்தியில் பா.ஜ.கவை கைவிட்ட ராமர்: பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

இம்மக்களை தேர்தல் தொடங்குவதற்கு முன்பே முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் அவசர அவசரமாக ராமர் கோயிலை பா.ஜ.க திறந்தது. இதை தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பா.ஜ.க பயன்படுத்தியது. மேலும் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ராமர் கோயில் திறப்பை வட மாநிலங்களில் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு முக்கிய யுக்தியாக பயன்படுத்தினர்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் லல்லு சிங் படுதோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் அபார வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து பா.ஜ.கவை ராமரே கைவிட்டுவிட்டதாக பலரும் இணையத்தில் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!