ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியலமைப்பு விதி 370 ஐ கடந்த 2019 இல் மத்திய பாஜக அரசு நீக்கியது. வெளி மாநிலங்களை சேர்த்தவர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலம் வாங்கக்கூடாது உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அரசியல் ரீதியாகவும் ஜம்மு காஷ்மீர் பொதுமக்களிடையேயும் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு கடும் எதிரிப்பு கிளம்பியது. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் நடந்த முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும். எனவே ஜம்மு காஷ்மீர் மக்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று (ஜூன் 4) நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் 11 மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 இடங்களுள் 4 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. 1 இடத்தில பாஜவின் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் JKNC தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பிரமுல்லா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். மேலும் அனந்தக் ராஜௌரி தொகுதியில் ஜம்மு காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதலவரும் ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சியைச் சேர்ந்த மெகபூபா மூப்தி முன்னிலையில் உள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி 5 இல் 2 முதல் 3 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.