இன்றைய நவீன உலகத்தில் மொபைல் இன்டெர்நெட் மொபைல் இவைதான் மாறி மாறி இளைய சமுதாயத்தை ஆக்கிரமித்து ஆண்டு வருகிறது என்றால் மிகையாகாது. உடல் வருத்தி விளையாட்டு என்ற நிலை மாறி உடலை பெருக்க வைக்கும் விளையாட்டுகள் தான் மிகுந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் விளை நிலங்களும், விளையாட்டு மைதானங்களும் உருமாறி இன்று நவீன அங்காடிகள் பெருகி உள்ளதை நாம் காண முடிகிறது. இந்த நவீன அங்காடிகளில் கிடைப்பது எல்லாம் உடலுக்கு கேட்டை விளைவிக்கும் உணவுகளும், குழந்தைகள் உடல் உழைப்பு இல்லாமல் விளையாடும் விளையாட்டுக்கள் மட்டும் தான்.
ஆனால் இதற்கு விதிவிலக்காக பரங்கிப்பேட்டை நகரம் இஸ்லாமிய சமுதாய மக்களால் பல்லாண்டு காலங்களாக விளையாட்டு மைதானம் பாராமரிக்கப்பட்டு, இன்றைய இளைய சமுதாயத்தினரால் இரவு நேரங்களிலும் அனைத்து சமுதாய மக்களும் விளையாடும் வகையில் வசதிகள் செய்து தந்திருப்பது நம் விழிகளை விரியச் செய்கிறது. ஆம் அதுதான் BMD.நெய்னா முகம்மது விளையாட்டு திடல் இங்குதான் BMD Badminton & Tennis Recreation Club எனும் விளையாட்டு சங்கம் பல தலைமுறைகளாக, B.M.D நெய்னா முஹம்மது என்பவரால் 1954 ஆண்டு வழங்கப்பட்டு டாக்டர் நூர்முஹம்மது என்பவரால் பராமரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு பேட்மிட்டன் மற்றும் டென்னிஸ் போட்டிக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு பல மாநில அளவிளான பரிசுகளையும் வென்றுள்ளார்கள்.
இந்த விளையாட்டு மைதானத்தை பற்றி பரங்கிப்பேட்டை பாவா பக்ருதீன் இவ்வூரின் விளையாட்டு மைதானத்தை பற்றி மிகவும் சிலாகித்து கூறியதாவது, “இந்த மைதானத்தில் ஹனிஃபா என்பவரால் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே டென்னிஸ் பயிற்றுவிக்கப்பட்டு பல மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார்கள. இதில் டாக்டர் நூருதீன், ராஜேஷ், மற்றும் அலி போன்றவர்களை குறிப்பிட்டுக் கூறலாம். அதே போல் இவ்வூரில் பந்து பேட்மிட்டன் ஒரு முக்கிய விளையாட்டாகவே கருதி இந்த ஊர் மக்கள் விளையாடி பயின்று வருகிறார்கள். இந்த விளையாட்டின் மூலம் பல பேர் மின்சார வாரியம், ரயில்வே போன்ற அரசாங்க வேலையிலும் அமர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
அதே போல் இந்த விளையாட்டு மைதானத்தில் 20 முதல் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தினமும் விளையாடுவதை காண முடியும். இந்த மைதானத்தில் விளையாடி தற்சமயம் வெளிநாடுகளில் வசித்து வரும் சிங்கை கௌஸ், ஆஸ்திரேலியா காசிம் மற்றும் இன்னும் பல நல்லுல்லங்கள் இரவிலும் தடையில்லாமல் விளையாடும் விதமாக மின்னொளி விளக்குகள் அமைதது கொடுத்துள்ளதையும் நினைவு கூர்ந்தார். அதே போல் இந்த மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்தினரும் நட்புடனும், இணக்கத்துடன் விளையாடி வருவதை நாம் காண முடியும். இந்த மைதானமே சமுதாய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் அடித்தளமாக இருக்கிறது என்றார். அத்தோடு இவ்வாறு தினமும் உடல் வருத்தி விளையாடுவதால் முதுகுத் தண்டெலும்புகள் உறுதிப் பெற்று, நீண்ட ஆயுளையும் தருகிறது” என்று கூறி முடித்தார்.
பரங்கிப்பேட்டையில் நிலை இவ்வாறு இருக்க, பல இஸ்லாமிய சமுதாயம் மிகுந்து வாழக்கூடிய பகுதிகளில் நல்ல வசதியான இடங்கள் இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் மக்களுக்கு உபயோகிக்கப்படாமலேயே கிடக்கிறது. உதாரணமாக கீழக்கரை இளைஞர்கள் வாலிபால் போட்டிகளில் வருடந்தோறும் பல போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவிளான பரிசுகளை வென்ற வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் முறையாக பயிற்சி எடுக்கவோ அல்லது பயிற்சி வழங்கவோ எந்த வசதி வாய்ப்பும் இல்லாமல் சிரமத்திலேயே இருந்து வருகின்றனர். கீழக்கரையில் எத்தனையோ வளமும் வசதியும் படைத்த ஜமாத் நிர்வாகங்கள் இயங்கி வருகின்றனர். இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதற்க நல்ல தீர்வு காண முன் வர வேண்டும்.
கீழக்கரை வடக்குத் தெருவில் உள்ள மணல் மேடு, புதுத் தெருவில் உள்ள மைதானம், மேலத் தெருவில் உள்ள தனியார் பள்ளிக் கூட மைதானம் மற்றும் எத்தனையோ செல்வந்தர்களின் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் இடங்களை சீர்படுத்தி இளைய தலைமுறையினருக்கு வசதி செய்து கொடுக்கும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை நாம் காண முடியும்.
கீழ்க்கரைக்கு விளையாட்டு மைதானத்தின் அவசியத்தை வலியுறுத்தி நாம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதமே நம் இணைதளத்தில் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடதக்கது.
https://keelainews.in/2017/01/02/playground/
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










Wow wow vry interested, vry proud to know this…
தனவந்தர்கள் ஊர் நலனில் அக்கறை கொண்டு என்ன செய்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே.அவர்களுக்கு பலன் அளிக்க வில்லையென்றால் எந்த பொது நலத்திலும் இறங்க மாட்டாங்க..செய்தி போட தான் செய்றீங்க அந்த செய்தி போய் சேரர்ந்து அதனால் பலன் கெடச்சா நல்லது.
எத்தனையோ நல்ல காரியங்கள் செய்து வந்தாலும் குறை சொல்லும் கூட்டம் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பாங்க…
அப்படியா?
மேலத்தெரு விளையாட்டு மைதானம் பல வருஷமா பூட்டி இருக்கே அதை திறந்த விட வேண்டியது தானே.பல வருஷத்திற்கு முன்னாடி அதுல தான் எல்லா தெரு வாசிகளும் விளையாடினார்கள்.அது புடிக்காம பூட்டு போட்டு விட்டார்கள்.அரசாங்கத்திற்கு இலவசமாக நிலம் கொடுக்க தெரியுது ஆனால் ஊர் நலனுக்காக ஒரு காணி நிலம் கொடுக்க மனசு இல்லையே…
மேலத்தெரு மட்டும் ஏன் கண்ணுக்கு தெரிகிறது, வடக்குத் தெருவில் மணல் மேடு உள்ளதே அவர்கள் மைதானம் அமைக்க வசதி இல்லாமலா இருக்காங்க..