கீழக்கரை நகராட்சியில் ”பேவர் ப்ளாக்” வேலை தொடங்கியது … இப்பொழுது “நிலைக்குமா” அல்லது மீண்டும் “பிளக்குமா”…

கீழக்கரை நகராட்சியில் கடந்த ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் பல இடங்களில் மண் சாலைகள் மற்றும் தார் சாலைகள் இருந்த இடத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைத்தார்கள். நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த பணியில் முறைகேடு என்றும், தரம் இல்லை என்றும் பல் வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதே போல் சமூக ஆர்வலர்கள் மூலமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்கள் பெற பட்ட பொழுது தொடர்ந்து சில குறிப்பிட்ட குத்தகைகார்ரகளுக்கே ஒப்பந்தம்  வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சூழலில் அரசியல் ஆட்சியாளர்கள் இல்லாமல் அரசு அதிகாரிகள் மட்டும் உள்ள நிலையில் மீண்டும் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓடக்காரப் பள்ளி மணியார் வெட்டை வழியாக மேலத்தெரு நெய்னா முகம்மது ஷா டீ கடை வரை பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணியை கீழக்கரை நகராட்சி ஆணையர் 14வது வார்டு பகுதிகளில் தொடங்கி வைத்தார். இம்முறை அரசாங்க அதிகாரிகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பணிகளும் ஒப்பந்தப்படி, முறைப்படுத்தப்படும் என்பதே கேள்வி குறி கலந்த ஆவலுடன்  பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

கீழை நியூசில் கடந்த 2016, டிசம்பர் 21ம் தேதி இக்குறைகள் சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

https://keelainews.in/2016/12/21/paveblock-issue/

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!