உங்கள் ஆதரவுடன் இரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் கீழை நியூஸ் …

கடந்த ஆண்டு(2016) டிசம்பர் மாதம் 29ம் தேதி கீழை நியூஸ் இணைதள பத்திரிக்கை பொது மக்களுக்கு முறையான இணைய தள பத்திரிக்கையாக அறிமுகப்படுத்ப்பட்டது.  தொடக்கத்தில் “கீழக்கரை செய்திகளின் நுழைவு வாயில் – நிஜங்களின் நிதர்சன நண்பன்” என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து பகுதி செய்திகளையும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உலக செய்திகளின் நுழைவு வாயில் என்று மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது.

கடந்து வந்த பாதை:-

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள்ளூர்  செய்திகளை மக்களுக்கு உண்மையான தரத்துடன் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டு, பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் முழுமையான இணைய பத்திரிக்கையாக உருவெடுத்தது.
கீழைநியூஸ் தொடங்கி சில காலங்களில் கீழக்கரை நடப்புகளை வீடியோவாக வாரம் தோறும் தோறும் தர வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட கீழை நியஸ் டி.வி இன்று 1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட யூட்யூப் சேனலாக தொடர்ந்து இன்று வரை கீழக்கரை நிகழ்வுகளையும், தனித்தன்மையான நிகழ்ச்சிகளையும் மக்களுக்கு தொடர்ந்து வழங்கி கொணடு வருகிறது.
பின்னர் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு கீழை நியூஸ் இணைய பத்திரிக்கை KEELAI MEDIA & ADVERTISEMENT PVT. LTD என்று இந்திய அரசாங்க தனியர் நிறுவன சட்டத்தின் கீழ் பதியப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.  இந்நிறுவனத்தில் விளம்பரம் மற்றும் அச்சு வேலைகளுக்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான நிர்வாக அலுவலகம் சென்னை மண்ணடி பகுதியில் முன்னனி எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் மற்றும் வெல்ஃபேர் பார்ட்டி தலைவர் சிக்கந்தர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து டிசம்பர் 2017, 8ம் தேதி கீழக்கரை கிழக்குத் தெரு அப்பா பள்ளிவாசல் எதிரில் கீழக்கரையில் கீழை நியூசின் பிரத்யேக அலுவலகம் முன்னாள் தினமலர் நிருபர் கே.எம்.அப்துல்லாஹ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் தினமும் 100 முதல் 200 பேர் பார்க்க கூடிய இணைதளமாக இருந்த www.keelainews.com  இன்று குறைந்தது 2000 பேர் பார்க்க கூடிய இணைதளமாகவும் 17800 விருப்பங்களை பெற்ற முகநூல் பக்கமாகவும் 5000 வாசகர் வட்டத்தை கொண்ட முகநூல் கணக்கை கொண்டதாகவும் வளர்ந்து விளங்குவதற்கு முக்கிய காரணம் வாசகர்களாகிய உங்களுடைய முக்கிய பங்களிப்பும், தரமான நடுநிலையான செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு கிடைத்த அங்கீகாரம் என்றே மகிழ்ச்சி கொள்கிறோம்.
மேலும் எங்களுடைய பணிகள் சிறக்க இன்று வரை ஊக்கம் அளித்து வரும் வாசகர்கள் நண்பர்கள் வியாபார நண்பர்கள் சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் எங்கள் நிறுவன உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக் ஜே.சித்திக் கார்த்திகேயன் ரசீது அகமது மற்றும் சாநவாஸ் ஆகியோருக்கு எங்களுடைய மனதார நன்றியை தெரிவித்துக் கொணடு இந்நிறுவனம் மென் மேலும் மக்கள் பணியில் வளாச்சி அடைய பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “உங்கள் ஆதரவுடன் இரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் கீழை நியூஸ் …

  1. உங்கள் பணி சிறக்க மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.எதிர்காலங்களில் அபார வளர்ச்சி அடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!