கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.இதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 3 பேரை தகுதிநீக்கம் செய்துள்ள சபாநாயகர், மீதமுள்ள 14 எம்.எல்.ஏ-க்கள் மீது விரைந்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.இதையடுத்து, தகுதிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரும் திங்கட்கிழமை கொண்டுவர உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த போப்பையா தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஆலோசிக்க, இன்று பெங்களூருவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து, 14 எம்.எல்.ஏ.க்களும் (11 காங்கிரஸ் + 3 மஜத) தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ஏற்கனவே, 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்பையில், ரமேஷ் குமார் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் பெரும்பான்மைக்கு தேவையான எண்கள் குறையும். தற்போதைய நிலைப்படி, கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 (நியமன எம்.எல்.ஏ தவிர்த்து) இடங்கள் இருக்கும் நிலையில், 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது 207 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.இதனால், பெரும்பான்மை எண்ணாக 105 உள்ளது. பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் எடியூரப்பாவால் எளிதாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். மேலும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் எடியூரப்பாவுக்கு உள்ளது. இதனால், அவரின் ஆட்சி நிலைப்பதில் தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஒருவேளை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றம் சென்று, சபாநாயகர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் (தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு போல) 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும்.இந்த இடைத்தேர்தலில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலே, ஒட்டுமொத்த பெரும்பான்மையான 113-ஐ எட்ட முடியும். 2013 வரை ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









