செங்கத்தில் தொடரும் அவலம்! ஆதரவற்றோர் கூலித் தொழிலாளர்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் உணவின்றி தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் இப்பகுதியில் ஆதரவற்றோர் குறித்து இவர்கள் அரசின் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் உணவின்றி தவித்து வருகின்றனர் இதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி உத்தரவின்படி அரசு அலுவலர்கள் கரோணா நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். செங்கம் பகுதியில் உள்ள ஆதரவற்றோர், கூலித்தொழிலாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுதிறனாளிகள், ஏழை எளியோர், உணவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது ஆனால் அரசு அலுவலர்கள் முறையாக கொடுப்பதில்லை. பாதிக்கப்பட்டோர் மனம்நலம் பாதிக்கப்பட்டோர் உணவின்றி தவித்து வருகின்றனர் தன்னார்வலர்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உணவு வழங்கி வருகின்றனர். மற்ற மற்றவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை ஆனால் அவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அலுவலர்கள் அலட்சியம் காட்டிவருகின்றனர் .
எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி தன்னார்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









