144 தடை உத்தரவு எதிரொலியாக சங்ககிரியில் பல ஏக்கரில் பயிரிட்ட பூக்களை அழித்த விவசாயிகள்:- உரிய நிவாரணங்களை வழங்க கோரிக்கை..
ஊரடங்கு உத்தரவால் விற்பனைக்கு அனுப்ப முடியாத பூத்துக் குலுங்கும் பூக்களை, வேறு வழியில்லாமல் விவசாயிகள், டிராக்டரை ஏற்றி அழித்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தேவூர், வட்ராம் பாளையம், பெரமிச்சிபாளையம், மேட்டுப்பாளையம், காவேரிப்பட்டி, கல்வடங்கம் , கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, குண்டு மல்லி, கோழிக் கொண்டை ஆகிய பூக்களை இந்த ஆண்டு அதிக அளவில் பயிரிடப்பட்டிருந்தனர்.
போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டதால், வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தவித்த விவசாயிகள், பூக்கள் பயிரிட்ட காடுகளை டிராக்டர் மூலம் அழித்து மாற்று விவசாயத்திற்கு ஏற்பாடு செய்தனர். லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள எடப்பாடி பகுதி விவசாயிகள், தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்குமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.


You must be logged in to post a comment.