மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..

மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..

ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் பிரதமர் உரை,

கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது ஊரடங்கால் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை சிறப்பான பாதையில் செல்கிறது. ஊரடங்கால் சிலர் தங்கள் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது.

பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நாட்டை மக்கள் அனைவரும் காத்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் படை வீரர்கள் போல் செயல்படுகின்றனர்.

ஊரடங்கை சிறப்பாக பின்பற்றி கொரோனா பரவலை மக்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் கட்டுப்படுத்தியுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக தவிர்த்துள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை விமான நிலையங்களில் முன்கூட்டியே பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.

இந்தியாவில் முதல் கொரோனா உறுதிப்படுத்தும் முன்பே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை யாரும் மறுக்க முடியாது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு நாடுகளை விட இந்தியாவின் செயல்பாடு சிறப்பானது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் செயல்பாட்டை உலகமே பாராட்டுகிறது.

சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

மற்ற எதையும் விட இந்திய மக்களின் உயிர் முக்கியமானது என்கிற அடிப்படையில் அரசு செயல்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தன.

மத்திய அரசும், சுகாதாரத்துறை நிபுணர்களும் தற்போதும் உஷார் நிலையில் இருக்கின்றன.

ஊரடங்கை நீட்டிப்பது என்று பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டன.

மே 3ந் தேதி ஊரடங்கு முடிவடையும் வரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்த 1 வாரம் மிகவும் முக்கியமானது.

கொரோனாவுக்கு எதிரான போரில் ஊரடங்கு எனும் கவசத்தை தற்போது நாம் துறக்க முடியாது.

ஏப்ரல் 20ந் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் சிலவற்றுக்கு விலக்குகள் வழங்கப்படும்.

ஏப்ரல் 20 முதல் விலக்கு அளிக்கப்படும் பணிகள் குறித்து நாளை அறிவிக்கை வெளியிடப்படும்.

ஏப்ரல் 20முதல் ஊரடங்கின் நிலை படிப்படியாக ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!