தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 30ந் தேதி வரை அமலில் இருக்கும்!
ஊரடங்கு நீட்டிப்பால் ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.
கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும்.
காலை 6மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பேக்கரிகள் செயல்படலாம், பார்சல் முறையில் மட்டும் விற்பனை நடைபெற வேண்டும்.
பிறமாநில தொழிலாளர்களுக்கு 15கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதால் தற்போது வாபஸ் பெறப்படவில்லை,உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









