அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அல்ல! சரக்கு வாங்க வந்தாலும் அட்டை அவசியம்! மதுரையில் அவசர அவசரமாக வினியோகம் செய்யப்பட்ட அட்டைகள்!

அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அல்ல! சரக்கு வாங்க வந்தாலும் அட்டை அவசியம்! மதுரையில் அவசர அவசரமாக வினியோகம் செய்யப்பட்ட அட்டைகள்!

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டும் ஏற்கனவே மூடப்பட்ட அரசு மதுபானக்கடைகள் இன்று 07.05. 2020-ம் தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. எனவே டாஸ்மாக் கடைகளுக்கு மதுவாங்க வருபவர்களும் ஏற்கனவே மதுரை மாநகராட்சி நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு வீடுகள்தோறும் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டுள்ள வண்ண அட்டைகளை தவறாமல் உடன் எடுத்து வர வேண்டும். இந்த அட்டை காலை 10.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை மட்டுமே செல்லும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பயன்படுத்த Yellow நிற அட்டையும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயன்படுத்த Pink நிற அட்டையும், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பயன்படுத்த Blue நிற அட்டையும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று 07.05.2020 ம் தேதி அன்று வியாழக்கிழமை என்பதால் மேற்கண்டவாறு மதுரை மாநகராட்சியால் வழங்கப்பட்ட Yellow நிற அட்டையினை அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள் கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். இது டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வருபவர்களுக்கும் பொருந்தும். அவ்வாறு எடுத்து வராதவர்களுக்கு மதுபானம் வழங்கப்படமாட்டாது. மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்கள் மீதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 ன் படி அமலிலுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறியதாகக் கருதி வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ளபடி காலை 10 மணியிலிருந்து பகல் 1 மணி வரை 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பகல் 1 மணி முதல் 3 மணி வரை 40 வயது முதல் 50 வயது உள்ளவர்களுக்கும், மாலை 3 மணி முதல் 5 மணிவரை 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். இந்த நேர ஒதுக்கீட்டினை மதுபானம் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் மதுபானங்கள் வாங்கிச்செல்ல (இரண்டு, மூன்று மற்றும் – நான்கு சக்கர) வாகனங்களில் வருவதை தவிர்க்குமாறும் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., கேட்டுக்கொண்டுள்ளார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!