கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 22.04.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 7441
நபர்கள் மீது மதுரை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செய்து, அவர்களிடமிருந்து 3957 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிலக்கு குற்றங்கள் செய்பவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 நபர்களை கைது செய்து, 16 மது பாட்டில்கள் மற்றும் 1.8 லிட்டர் சாராய ஊறல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இந்த விதி மீறல்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மூலம் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். அறிவுறுத்தியுள்ளார்கள்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









