பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும்  நாங்குநேரி மாணவர் சின்னதுரை ஆகியோரை முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு..

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும்  நாங்குநேரி மாணவர் சின்னதுரை ஆகியோரை முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு..

தங்கள் உயர்கல்வி செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக முதலமைச்சரை சந்தித்த பின் மாணவர்கள் பேட்டி.

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டுப்பட்ட மாணவர் சின்னதுரை ஆகியோர் முதலமைச்சரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இருவருக்கும் திருக்குறள், புத்தகம் மற்றும் பேனா வழங்கி முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்..

முதலமைச்சரை சந்தித்த பின் மாணவி நிவேதா பேட்டியில் கூறியதாவது;

முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் இருவரும் என்னை நேரில் அழைத்து பாராட்டினார்கள்,முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

என் உயர்கல்விக்கு நான் என்ன படிப்பதாக இருந்தாலும் உதவி செய்வதாக கூறி உள்ளார்.

உயர்கல்வி செலவு முழுவதும் அரசு ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் படிப்பது தான் என் இலக்கு அதற்கு அரசு உதவி செய்யும்  என நம்புகிறேன்.

பள்ளியில் சக மாணவிகள் என்னை ஒரு திருநங்கை என்று ஒதுக்காமல் நன்றாக பார்த்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

மாணவர் சின்னதுரை கூறியதாவது;

முதலமைச்சரை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றேன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் நேரில் அழைத்து என்னை பாராட்டினார்.

என்னுடைய உயர்கல்விக்கு உதவி செய்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

B com CA படிக்க வேண்டும் என்பது என் ஆசை முதலமைச்சர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

என் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு உதவி செய்வதாக முதலமைச்சர்  தெரிவித்துள்ளார்.

எனக்கு நடந்தது போன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் நடைபெற கூடாது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து மேலே வர வேண்டும்.

அந்த சம்பவம் எனக்கு நடக்காமல் இருந்திருந்தால் நான் 530 க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கி இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!